Sunday 4 December 2011

டாக்டர் அப்துல் கலாம்

இந்தப்புத்தகம் இந்தியாவில் வசிக்கும் கோடானுகோடி பாமர மக்களின் மீதும் குறிப்பாக இளைஞர்களின் மீதும்.. அவர்களில் ஒருவரான டாக்டர் அப்துல் கலாம் கொண்டிருக்கும் அளவு கடந்த பாசம்..உள்ளார்ந்த உறவு.. எளிமையான வாழ்க்கை முறை..போன்றவை மட்டுமன்றி...ஆழ்ந்த ஆன்ம பலத்தின் வெளிப்பாடு என்றும் கூறலாம்.! மேலும்..என்னைப் பொருத்தவரை இதை எழுதுவது ஒரு புனித யாத்திரை போல்..வாழ்க்கையின் நிஜமான சந்தோஷத்தை கண்ண்டுணர்ந்த ஒரு மார்கத்தை..டாக்டர் கலாம் அவர்களின் மூலமாக அறிந்து கொள்வது...மற்றும்..நமக்குள் மறைந்து கிடக்கும் ஞானம் என்ற ஆதார சக்தியினை..நாம் ஒவ்வொருவரும் தமக்குள் தேடி அறிந்து கொண்டு..தொடர்பு கொள்வது போல் அமைந்தது என்றால் அது மிகையாகாது. உங்களில் பலர் டாக்டர் கலாம் அவர்களை நேரில் சந்திக்காமல் இருந்திருந்தாலும்..இந்த புத்தகம் வாயிலாக அவரது தோழமையினை அனுபவிப்பது மட்டுமன்றி..உங்கள் ஆன்மாவுக்கே அவர் நண்பராகி விடுவார் என்பது திண்ணம்...டாக்டர் அருண் திவாரி..விங்ஸ் ஆப் பையர் ( அக்கினிச் சிறகுகள்..தமிழாக்கம்..திரு மு. சிவலிங்கம்)

ஒரு சமயம் வடமாநிலப் பள்ளி ஒன்றில்..மாணவர்களுக்கு வகுப்பில் புவியியல் பாடம் நடந்து கொண்டிருந்தபோது.. உள்ளே நுழைந்தார்..பாரத‌  தேசத்தின் பெருமையாகவும்… இந்திய ஏவுகணை இளவல் என்றும்... விஞ்ஞானத்தின் தந்தை என்றழைக்கப்படும்...மேதகு டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்!...அவ்வமயம்..வகுப்பைத் தொந்தரவு செய்யாமல், ஒரு பெஞ்சில் மாணவர்களுடன் அமர்ந்து..வியப்புடன் நோக்கிய மாணவர்களை..தனக்கே உரிய புன்னகையுடன், பாடத்தைக் கவனியுங்கள் என்று கூறிவிட்டு, தானும் கவனித்தது மட்டுமன்றி... ஆசிரியை கேட்ட கேள்விகளுக்கு ஒரு மாணவனின் உற்சாகத்தோடு டாக்டர் கலாம் பதில் சொன்னபோது, மொத்த மாணவர்களும் கைத்தட்டி பாராட்டினார்கள்.! விடைபெறுகையில்.. ஆசிரியயைக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு மாணவர்களிடம் :“வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என நினைத்தால் ஒரு இலக்கு வேண்டும். ஆனால் அந்த இலக்கு பெரிதாக இருக்க வேண்டும். சிறிய இலக்கை வைத்திருப்பது குற்றத்துக்குச் சமம்… அம்மாவின் பேச்சைக் கேளுங்கள், ஆசிரியர்களை மதியுங்கள்,” என்றபோது, அவர் கூறியதை ஒப்புக் கொள்வது போல மாணவர்கள் பெரும் உற்சாகத்தோடு கைத்தட்டினர்... மேதகு டாக்டர் கலாம் அவர்களது வருகை மொத்த பள்ளியின் இயல்பையே புரட்டிப் போட்டுவிட்டதாய் உணர்கிறோம் ...பள்ளியின் தலைமை ஆசிரியர்.! அதுதான் டாக்டர் அப்துல்கலாமின் சிறப்பு. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அடுத்த தலைமுறைக்கு ஒரு அழகான பாதையை அமைத்துத் தந்துவிட்டு வருகிறார் என்பவை வியப்பூட்டும் செய்திகள்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும்.. மிகப் பிடித்தமான ஒரே தலைவர் டாக்டர் கலாம்தான் என்று சொல்லும் அளவுக்கு மாணவர்கள் மத்தியிலேயே...பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும்.. தனது வாழ்நாள் முழுவதையும் மாணவர்களின் கல்விக்காக, அவர்களின் முன்னேற்றுத்துக்காகவே..இருந்து... செலவிட்டு வருகிறார் இந்த 80 வயது இளைஞர் என்ற கூற்றில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியுமா!

1. எளிமை, நேர்மை, நாட்டுப் பற்றுக்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்களில் முதன்மையானவர் நமது முன்னாள் இந்திய ஜனாதிபதி..டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். தமிழகத்தின் கடைக்கோடியான.. ராமேஸ்வரத்தில்.. எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, விஞ்ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆராய்ச்சிகளிலேயே இளமையைக் கரைத்துக் கொண்டு இந்தியாவுக்கென்று சுயமான தொழில்நுட்பத்தில் ஏவுகணையை வடிவமைத்தவர் தாம்..நமது ‘பாரத ரத்னா’ டாக்டர் கலாம் அவர்கள்.! அக்னி, பிருத்வி போன்றவையெல்லாம் உருவானதில் டாக்டர் கலாமின் அவர்களின் முக்கிய பங்கு பற்றி நாம் அறிவோம்.!

2. மேலும்..பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த போது தான்..நடைபெற்ற...பொக்ரான் அணு குண்டு வெடிப்புச் சோதனைகளில் முக்கியப் பங்காற்றியது மட்டுமன்றி..அதன் செயல்பாடுகள் ரகசியமாக வைக்கப்படவும் முக்கிய பங்காற்றினார் என்பவை செய்திகள்.! 

3. இந்தியாவின் முதல் சுய தொழில்நுட்ப செயற்கைக்கோளான எஸ்எல்வியை வடிவமைத்த பெருமையும் இவருக்கே உரித்தானது.!

4. 2002 முதல் 2007 வரை இந்தியாவின் மகா எளிமையான.. குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் கலாம்... வெட்டி செலவு, பந்தாக்கள் அறவே பிடிக்காத இவர்..குடியரசுத் தலைவரான தன்னைப் பார்க்க வந்தவர்களை.. ஒருபோதும்..சந்திக்க மறுத்ததில்லை.!

5. உலகம் முழுவதும் 1 கோடி மாணவர்களைச் சந்தித்து உரையாடி அவர்களின் சிந்தனையைச் செழுமைப்படுத்தியுள்ள இந்த மாமேதையை எப்படி பெருமைப்படுத்துவது என்ற கருத்துக் கணிப்பில்...டாக்டர் கலாம் அவர்களின் மனதுக்கு உகந்த மாணவர்களின் தினமாக அவர் பிறந்த நாளை அறிவிக்க வேண்டும். அதுவே சரியான நிகழ்வாக‌ இருக்கும் என்பதை வலியுறுத்தி ஏராளமானோர் இணையம், மின்னஞ்சல் மூலம் ஐநா சபைக்கு(UNITED NATIONS) கோரிக்கை விடுத்துள்ளனர் என்பவை வியப்பூட்டும் செய்திகள்.! மேலும், அதற்கு முன்னதாக, இந்திய அரசு இந்த விஷயத்தில் அக்கறை காட்டி,டாக்டர் கலாமின் பிறந்த தினத்தை இந்திய மாணவர்கள் தினமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கனவே எழுப்பபட்டுள்ளதுஎன்பதையும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறியலாம்.!

6. “எந்த நாடு தனது  உயரிய பண்பாளர்களையும், அரிய கலைஞர்களையும் காலத்தே மதிக்கத் தவறுகிறதோ, அந்த நாட்டில் மீண்டும் அந்த உயர் பண்பாளர்கள் பிறக்காமலே போவார்கள்,” என்கிறது மகாபாரதம். அதற்கேற்ப.. பாரத ரத்னா விருதினை டாக்டர் கலாமுக்கு இந்தியா வழங்கியுள்ளபோதும்... பரந்த சிந்தனையும் உயர்ந்த லட்சியமும் கொண்ட டாக்டர் கலாம் அவர்களது புகழ் பாரத ரத்னாவுக்கும் அப்பாற்பட்டது என்பது திண்ணம். !

டாக்டர் கலாமின் மிகச்சிறந்த சொற்பொழிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சில சங்கதிகள்:

பொதுவாக மக்களாகிய நாம் சொல்வது :A.. அரசாங்கம் செயலற்றது. B. சட்டங்கள் பழமையானது. C. மாநகராட்சி குப்பைகளை ஒழுங்காக அள்ளுவதில்லை.
D. தொலைபேசிகள் சரிவர இயங்குவதில்லை. E.  இந்திய ரயில்வே நகைப்புக்குரியது.
F. இந்திய‌ விமானசேவை உலகிலேயே மட்டமானது. G. கடிதங்கள் உரிய இடத்தை அடைவதில்லை.

நாம் சொல்கிறோம், சொல்கிறோம் மேலும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இவைகளை சரிசெய்ய.. நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன என்று பார்த்தால்..சொற்பமே.!

இவ்வாறாக இந்தியாவில் அரசை தினமும் குறை சொல்லும் மக்களைப் பார்த்து டாக்டர் கலாம்..பின்வருமாறு கேட்கிறார்..:-

1. சிங்கப்பூர்வாசியாக உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கு நீங்கள் உங்கள் சிகரெட்துண்டை சாலையில் எறிவதில்லை. அல்லது தெருக்களில் உணவருந்துவதில்லை. மாலை 5 மணி முதல் 8 மணி வரை Orchard Road செல்வதற்கு 5 டாலர் (தோராயமாக 60 ரூபாய்) தருகிறீர்கள். உணவகங்களில் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதல் நேரம் இருந்தால் பார்க்கிங்கில் கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்கள். சிங்கப்பூரில் நீங்கள் எதுவும் சொல்வதில்லை!

2.  நீங்கள் ரம்ஜான் தினத்தில், துபாயில் தெருக்களில் உணவருந்தத் துணிவதில்லை.!

3. லண்டனில் தொலைபேசித்துறையில் பணிபுரியும் ஊழியருக்கு மாதம் 10 Pound லஞ்சம் தந்து எனது STD / ISD பில்லை வேறொருவருக்கு அனுப்பிவிடு என்று சொல்வதில்லை.!

4.வாஷிங்டனில் 55 KM வேகத்துக்குமேல் சென்று போக்குவரத்துக் காவலரிடம் “நான் யாரென்று தெரியுமா.!இன்னாரின் மகன். உனது லஞ்சத்தை வாங்கிக் கொண்டு வழிவிடு” என்று பேசுவதில்லை.!

5. ஆஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்து கடற்கரைகளில் தேங்காயை அதற்குரிய தொட்டியில் போடாமல் கடற்கரையில் எறிவதில்லை.!

6.ஏன் நீங்கள் டோக்கியோ தெருக்களில் புகையிலைத் துப்புவதில்லை.!

7.பாஸ்டனில் நீங்கள் ஏன் போலிச் சான்றிதழ் வாங்க முயல்வதில்லை.!

நாமும் இங்கு.. அதே ”நீங்களைப்” பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
வெளிநாட்டு விதிமுறைகளை..இங்கிருந்து..அங்கு சென்று தங்கியிருக்கும்போது முறையாக பின்பற்றும் நாம்.. சொந்த நாடான‌ இந்தியாவில் இறங்கியதும் இவற்றை எல்லாம் பின்பற்றுகிறோமா என்று ந்மது மன்சாட்சியினை கேட்டுக் கொள்ளலாம்.! புரட்சித் தலைவரின் புகழ் பெற்ற பாடல் ஒன்றுடன் கட்டுரையினை நிறைவு செய்து கொள்கிறேன்.

நாடென்ன செய்தது ந‌ம‌க்கு 
என கேள்விகள் கேட்பது எதற்கு 
நீயென்ன செய்தாய் அதற்கு 
என நினைத்தால் நன்மை உனக்கு 

நான் ஏன் பிறந்தேன் 
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் 
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் 
நினைத்திடு என் தோழா 
நினைத்து செயல்படு என் தோழா 
உடனே செயல்படு என் தோழா
                                                                                                                                                                                                        அக்டோபர் 15ம் நாள்..டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம்

No comments:

Post a Comment